Breaking News

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சேவை நல பராட்டு விழா...

சர்ஜுன் லாபீர்

கல்முனை பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் ஏற்பாடில் உத்தியோகத்தர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் இன்று(7) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

நலன்னோம்பல் அமைப்பின் பிரதித் தலைவர் கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் நெறிப்படுத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் இடம்மாற்றம் பெற்ற உத்தியோகத்தர்கள்,பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்,ஒய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்புகளும் பாராட்டுகளும் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் 2020ம் ஆண்டில் ஒவ்வொரு தர உத்தியோகத்தர்களிலும் வினைத்திறனோடு சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்புகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீசன், ஏ.எம் அப்துல் லத்தீப் மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ரீ.ஜெ அதிசயராஜ் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,நலன்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.எம்
ஹசன் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









No comments

note