மாளிகைக்காடு சபினாவில் "கெகுலு துரு உதானய" தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு !
நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமேகவின் ஒருங்கிணைப்பில் கல்வியமைச்சின் அனுசரணையுடன் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் கல்வி பயில சேரும் நாட்டின் புதல்வர்களை சுற்றாடலை நேசிக்கும் நற்பிரஜைகளாக உருவாக்கும் "மரம் வளர்ப்போம், நல்ல பிள்ளைகளை உருவாக்குவோம்" (கெகுலு துரு உதானய) எனும் தேசிய மாணவர் மரம் நாடும் வேலைத்திட்டமும் தரம் ஒன்றுக்கு அனுமதி பெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தரம் ஒன்றுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் அவர்களின் மூத்த மாணவர்களினாலும், பாடசாலை ஆசிரியர்களினாலும் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புக்கள் வழங்கி வரவேற்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த மாணவர்களின் வீடுகளில் நடுவதற்காக பயன்தரும் பழக்கன்றுகளை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர் பெற்றோர்களுக்கு வழங்கி வைத்ததுடன் பாடசாலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
No comments