Breaking News

மக்களின் பலதசாப்த பிராச்சினை முடிவுக்கு வருகிறது : 600 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்தது வேலைத்திட்டம் !

நூருல் ஹுதா உமர் 


ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஒரு லட்சம் கிலோ மீட்டர் பாதை புனரமைப்பு திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயணித்துக்கொண்டிருந்த இரு கிராமங்களை ஒன்றிணைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட  பாதைகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் வேலைதிட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவின் வழிகாட்டலின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக்கின் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்த வேலைத்திட்டத்தில் பள்ளிக்குடியிருப்பு-சம்பு நகரை இணைக்கும் பாதை. (2.6 கிலோமீட்டர்) இசங்கணிச்சீமை-பள்ளிக் குடியிருப்பை இணைக்கும் பாதை (2.1 கிலோமீட்டர்) நீத்தை அம்பலத்தாரை இணைக்கும் பாதை (7.9 கிலோமீட்டர்) பட்டியடிப்பிட்டி கறடிப்பால வட்டை ஊடாக சம்பு நகரை இணைக்கும் பாதை (4.7 கிலோமீட்டர்) உட்பட  பல பாதைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு செய்ய  முதற்கட்ட வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ. ஹஸ்ஷார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை காரியாலய பிரதம பொறியிலாளர் என்.டீ. சிறாஜிடீன், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஜனாப் அலியார் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யுப், ஏ ஜி பர்ஷாத் நஜீப், ஆகியோர் கலந்து கொண்டு  இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.









No comments

note