கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் மற்றுமொரு மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வருடாவருடம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தினை கல்முனை சர்பான் மோட்டார்ஸ் உரிமையாளரும் மற்றும் கல்முனை ரியல் இஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் கல்முனைக்கான இளைஞர் அமைப்பாளருமான முஹம்மட் சர்பான் அவர்களின் விஷேட வேண்டுகோளுக்கினங்கே தேவைப்பாடுள்ள மாணவர்களுக்கு இப்பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளை கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் பவுன்டேசனின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் சுகாதாரத்துறையினரின் முழு வழிகாட்டுதலுக்கும் ஏற்ப சுகாதாரத்துறை வைத்தியரின் முழு அனுமதியினைப் பெற்று இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வை சரிவர நடாத்தி முடிக்க பயனாளிகளை தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் விஷேட நன்றியினை ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
மேலும் 2021பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் வேலைத்திட்டத்தினை முழுமையாக ஒழுங்கு செய்து சிறப்பாக நேறிப்படுத்திய அவரது செயலாளர் முஹம்மட் சப்ராஸ் அவர்களுக்கும் விஷேட நன்றியினைத்தெரிவித்ததுடன் மற்றும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் மேலும் கல்முனை ரியல் இஸ்டார் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
No comments