பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு...!
(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்
எம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.
No comments