Breaking News

இணைய வங்கி சேவை அம்பாறை மாவட்டத்தில் முதலாவதாக காரைதீவு சமுர்த்தி வங்கியில் திறந்து வைக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி வங்கிகளுக்கிடையிலான கணனி வலையமைப்பைக் கொண்ட இணைய வங்கி சேவை அம்பாறை மாவட்டத்தில் முதலாவதாக காரைதீவு சமுர்த்தி வங்கியில் கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக மேலதிக மாவட்ட செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனினால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் முன்னிலையில், காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்தீபன், கணக்காளர் செல்வி என்.ஜயசர்மிகா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சுமுகம்மட் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப் ஏ.எல்.எ.ஹமீட், சமுர்த்தி கண்காணிப்புக் குழு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதன் போது சமுர்த்தி வாடிக்கையாளர்களுக்கான பணம் வைப்பிலிடுதல் மற்றும் மீளப்பெறுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், சமுர்த்தி வங்கி அமைந்துள்ள பாதை ஓரங்களில் மரநடுகையும் இடம்பெற்றது. மேலும் வங்கி, கள உத்தியோகத்தர்களுக்கான அலுவலக சீருடை வினியோகமும் இடம்பெற்றது.





No comments