Breaking News

ஜனாஸா எரிப்புக்கெதிராக கபன் துணி கண்டன பேரணி இன்று நிந்தவூரில் இடம்பெற்றது

(யாக்கூப் பஹாத்)

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று

நிந்தவூர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன பேரணியை வைத்தியசாலை வீதியில் இருந்து ஆரம்பம் செய்தனர்.
இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.

இதன் போது அவ் இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் இப் பேரணியை இடை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இப்பேரணி இடை நிறுத்தம் செய்யப்பட்டது.






No comments