சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பொதுச் சுகாதார திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு “மீற்றரான வாழ்க்கை” எனும் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதற்கமைய சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இன்று(03) இடம் பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதர் எ.றபீக், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணரத்ன,பொலிஸ் உத்தியோகத்தகர் திருக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
“சரியான நேரத்தில் மாஸ்க் ஒன்றை சரியாக அணிந்திட மீற்றராய் இருங்கள்” எனும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நுளையும் முக்சக்கர வண்டிகளில் பொலிஸாரினால் ஒட்டப்பட்டன.
No comments