Breaking News

அடாவடித்தனதுக்கு எதிராக புத்தளம் நகர சபையினால் கவனயீர்ப்பு போராட்டம்

புத்தளம் நகர சபையின் கௌரவ உறுப்பினர் எம் எச் எம் ரஸ்மி அவர்கள் கடந்து சனிக்கிழமை ஜனாப் என்பவரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

குற்றவாளி இரு தினங்களுக்குப் பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உரிய தண்டனையை வழங்கக்கோரியும், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற மிலேச்ச தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டித்தும் இனிமேல் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் நகரபிதா மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை புத்தளம் நகர சபைக்கு முன்னால் மேற்கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள்,
வான் குளத்தின் அனைக்கட்டினை உடைக்குமாறு கோரி உறுப்பினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்தோடு நகர சபையின் உத்தியோகத்தர்களுக்கும் பயமுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும். சட்டத்தின் பின்னால் இருந்து இயங்குபவர்களும் அவர்களை பாதுகாக்க கூடாது என்ற கோறிக்கையினை முன் வைத்து இன்று இவ் கண்டனப் போராட்டம் இடம்பெறுகிறது.

நகர சபை என்பது ஒரு நகரை 
ஆளுகின்ற ஆட்சிமையம். அதிலே இருக்கின்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் அது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். 
எனவே இவற்றை துடைத்தெரிய வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது என தெரிவித்தார்.

இக் கவணயீர்ப்பு போரட்டத்தில் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்திகோத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டு தமது கண்டணத்தை வெளியிட்டனர்.

ஊடகப் பிரிவு















No comments

note