கொரோனா நீடிக்குமா?🤔 மஹர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பலி!
MADURAN KULI MEDIA
01/11/2020
BREAKING NEWS
இலங்கையின் 21 ஆவது கொரோனா மரணம் நேற்றைய தினம் (31) பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய மஹர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிக இரத்த அழுத்தம் மற்றும் சுவாச கோளாறு காரணமாக இவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது பிசிஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், 31 ஆம் திகதி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments