Breaking News

ஆசிய-பசிபிக் வலய நாடுகளின் மேயர்கள் பங்குபற்றிய செயலமர்வில் புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ்

நிலையான அபிவிருத்திக்கான அடைவுகள் எனும் தொனிப்பொருளில் ஆசிய-பசிபிக் வலய நாடுகளின் மேயர்கள் பங்குபற்றிய செயலமர்வு இன்று zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இயங்கும்  UNESCAP, UNHABITAT, UNU-IAS, APRU, UCLG-ASPAC, IGES மற்றும் NUA ஆகிய நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்து கொண்டார். 

இதன்போது நிலையான நகர்புற வளர்ச்சியைத் திட்டமிடுதல், நிர்வகித்தல் மற்றும் நிதி மூலங்களை இனங்காணல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் சுமார் 41 உலக நாடுகளின் மேயர்கள் கலந்து கொண்டதோடு, இதன் இரண்டாவது செயலமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











No comments

note