சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவீன மயமாக்கப்பட்ட போக்குவரத்து பிரிவு காரியாலயம் திறப்பு
ஐ.எல்.எம் நாஸிம்
(சம்மாந்துறை)
சம்மாந்துறை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.ஏ.எம் முஸ்தபா கலந்து கொண்டதோடு சம்மாந்துறை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியான தலைமை பொலிஸ் பரிசோதர் ஏ.எல் றபீக் , சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.எம்ஆசிக்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம் பாரிஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல் மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நவீனமயப்படுத்தப்பட்ட தனியான போக்குவரத்து பிரிவாக இது செயற்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments