கிழக்கு மாகாண காணி உத்தியோகத்தராக ஏ.ஜெமீல் நியமனம்.
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலகத்தில் குடியேற்ற உத்தியோகத்தராக பணியாற்றி வந்த ஏ.ஜெமீல் கிழக்கு மாகாண காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தில் கடமையாற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் 37 பேர் கிழக்கு மாகாண காணி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
குறித்த நியமனம் காணி ஆணையாளர் நாயகத்தினால் 2020.10.21ம் திகதிய 2198/16ஆம் இல வர்த்தமானியில் பிரசுரிக்ப் பட்டுள்ளது.
இவ் நியமனத்தில் அம்பாறை மாவட்டத்தில் 21 பேரும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் அடங்குவர்.
No comments