JobVibe.lk - Sri Lanka Job Portal

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் மர நடுகை நிகழ்வு.

நூருள் ஹுதா உமர். 

 நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டழுவல்கள் திணைக்கள பணிப்பாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க  இன்றைய தினம் ஜூம்ஆ பெரியபள்ளிவாயல் முற்றத்தில் மர நடுகை நிகழ்வு  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் டீ.எம். அன்சார் (நளீமி), நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பஸீர், நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு மரம் நடுகையில் ஈடுபட்டனர். 

மேலும் இம் மரநடுகை நிகழ்வுகள் எதிர்வரும் தினங்களில் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் ஜூம்ஆ பள்ளிவாசல், பிரதேச செயலாளர் காரியாலயம், நிந்தவூர், பிரதேச சபை நிந்தவூர், நிந்தவூரிலுள்ள கோயில்கள், அல் அஸ்ரக் தேசிய பாடசாலை, அட்டப்பள்ள விநாயகர் வித்தியாலயம், நிந்தவூர் ஆயுள் வேத வைத்தியசாலை, நிந்தவூர் பொது விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال