புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் முன்னெடுத்து வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் புத்தளம் நகருக்கு அப்பாலும் விஸ்தரிப்பு.
புத்தளம் நகர சபை எல்லையை தாண்டி வண்ணாத்திவில்லு பிரதேச சபை எல்லைக்குள் இருக்கின்ற இஸ்மாயில் புரம், வண்ணாத்திவில்லு மற்றும் கரைத்தீவு ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு நகரசபையின் முழு வளங்களையும் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர சபை எல்லைக்கு அப்பால் நகர சபையினால் செயல்படுத்தப்பட்டு வரும் இம்மனிதநேய வேலைத்திட்டத்திற்கு பொது மக்களிடையே பாரிய வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது .
எதிர்வரும் தினங்களில் கல்பிட்டி பிரதேச சபை எல்லைகளுக்குள்ளும் விஸ்தரிக்கப்படும் என புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் தெரிவித்தார்.
No comments