Breaking News

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட அமைச்சுக்கள்

பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். 

அத்துடன் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

S.M.M.SHAFAQ  (JAWADHI)





No comments

note