Breaking News

கொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி?

(சர்ஜுன் லாபீர்)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து பொறியியலாளர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை எவ்வாறாறு அடக்கம் செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறியியில் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள கலாநிதி ஏ.டப்ளியூ.எம். றஸ்மி, கலாநிதி ஏ.எம்.எம்.சியாத், கலாநிதி எம்.சீ.எம்.நஸ்வி, கலாநிதி ஏ.எம்.ஏ. சஜா, கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் மற்றும் பொறியியலாளர் எம்.சீ. றியாஸ் ஆகியோர் இணைந்தே இந்த அறிக்கையினை தயாரித்துள்ளனர். 

ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் சிவில் அமைப்புக்களிற்கு உதவும் வகையில் கடந்த மே மாதம் இவ்வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கொவிட் - 19 இனால் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான வழிகாட்டல்களாகும்.

குறித்த அறிக்கையின் சுருக்கம்: 

கொவிட் - 19 இனால் மரணமடைந்தவர்களின் இறந்த உடல்களை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டியில் அடக்கம் செய்வதை அல்லது தகனம் செய்வதை அனுமதிக்கின்றது.

இலங்கையில் கொவிட் - 19 உடன் உடல்களைக் கட்டாயமாகத் தகனஞ் செய்வது சமய மற்றும் கலாசாரப் பாரம்பரியங்கள் காரணமாக நல்லடக்கம் செய்வதனை வழக்காகக் கொண்டிருக்கின்ற மேலதிக ஆழ்ந்த துன்பத்தினை உண்டுபண்ணுகின்றது. 

கொவிட் - 19 இனால் தொற்றுக்குள்ளானவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட பிரதான அக்கறைகள் இறந்த உடல்களைப் அடக்கம் செய்வதில் உள்ள தவறான முகாமைத்துவம்ஃபாதுகாப்பற்ற செயற்பாடுகள், நில நீருடன் மாசுபடுவதற்கான சாத்தியத்தன்மை என்பனவற்றை உள்ளடக்குகின்றன. 

தற்போது காணப்படும் விஞ்ஞான ரீதியான ஏடுகள் மற்றும் எழுத்துகள், கொவிட் - 19 நோயாளிகளைக் கையாளுவது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டு நெறிகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை பின்வரும் பிரதான அக்கறைகளைக் கையாளுகின்ற கொவிட் - 19 னால் தொற்றுக்குட்பட்டவர்களின் இறந்த உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைமுறைகளின் தொகுதியொன்றை முன்வைக்கின்றது. 

சாதாரன அடக்கம் செய்வதற்கான சடங்குகளிலிருந்து வேறுபாடுகள்: 

இறந்த உடல் உறவினர்களிடம் வழங்கப்படமாட்டாது (இறந்த உடல்களை பயிற்சிபெற்ற ஆளனியினர் மாத்திரம் கையாள வேண்டும்.
இறந்த உடல் கழுவப்படாது, பாரம்பரிய ரீதியான ஆடையிடல் இராது. மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே பார்வையிட முடியும். 
உறுஞ்சும் பொருட்கள் உடலின் கீழ் வைக்கப்பட வேண்டும். அத்துடன். இறந்த உடல் முதலாவது உடல் பையினுள் வைக்கப்பட வேண்டும்.
இரண்டாவது உடல் பையினால் உடலைச் சுற்றி பொறியிடல் வேண்டும்
ஓவ்வொரு உடல் பையினதும் வெளிப் பகுதியில் கிருமித் தொற்றுநீக்கிகளைப் பிரயோகித்தல் வேண்டும்
பெட்டியினுள் வைப்பதுடன் வைத்தியசாலையில் ஒரு முறை பொறியிடப்பட்டு வைக்கப்பட்ட பெட்டி திறக்கப்படக் கூடாது
அதிகாரிகளினால் அதிகாரமளிக்கப்பட்ட வாகனங்களில் மாத்திரமே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அடக்கம் செயய்ப்படும் இடம் மற்றும் அடக்கம் செய்யப்படும் முறையைத் தெரிவு செய்தலும் பின்வரும் விதிமுறையினைப் பின்பற்றலும்: 

ஏதேனும் நீர் ஊற்று அல்லது நீர்வழிகளிலிருந்து ஆகக் குறைந்தது 30 மீற்றர் தூரத்தில், ஏதேனும் புல வடிகாலிருந்து 10 மீற்றர் தூரம், குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஏதேனும் நிலநீர் முலங்களிலிருந்து 250 மீற்றர் தூரம், அண்மையிலுள்ள வசிக்கும் கட்டடத்திலிருந்து 500 மீற்றர் தூரம்
நில மேற்பரப்பிலிருந்து 3.3 மீற்றரை விட ஆழமான நிலநீர் மட்டத்தைக் கொண்ட இடங்கள்
நில நீர் மட்டம் நில மேற்பரப்பிலிருந்து 3.3 மீற்றரை விட ஆழமற்றதாக இருக்குமிடத்து, தேவையானளவு சுற்றுவட்டச் சுவர் ஒன்றின் மூலம் எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருத்தமான மண்ணால் நிரப்பப்படுவதன் மூலம் தேவையான அளவுக்கு நில மட்டம் அதிகரிக்கப்பட முடியும்
நில மட்டத்திலிருந்து அடக்கம் செய்யப்படும் குழிப்பகுதியின் அடி வரை உள்ள ஆகக் குறைந்த ஆழம் 1.8 மீற்றர் ஆகும்.
அடக்கம் செய்யப்படும் குழிப் பகுதி வரையறுக்கப்பட்டளவு உடனடுத்துக் காணப்படும் குடும்ப உறுப்பினர்களுக்காக மாத்திரம் பாதுகாப்பிடப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பயிற்சிபெற்ற ஆளனியினர் மாத்திரம் அடக்க செயன்முறையைக் கையாள வேண்டும். அடக்கம் செய்யப்படும் புதைகுழிப் பகுதிகள் அடையாளங்காணும் மற்றும் கண்டுபிடிக்கும் நோக்கங்களுக்கான தெளிவாக எல்லையிடப்பட்டிருக்க வேண்டும்.






No comments

note