சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிறைவேற்று சபை கூட்டமும் அலுவலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும்.
நூருல் ஹுதா உமர்
பலவருடங்களாக கிழக்கு பிராந்திய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயற்பட்டு வரும் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிறைவேற்று சபை கூட்டமும் அலுவலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இன்று இரவு மருதம் கலைக்கூடலின் சாய்ந்தமருது அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்றது.
அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா காலத்தில் கலைஞர்களின் நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்ட இந்த நிறைவேற்று சபை கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ. முகம்மத் அசாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அமைப்பின் பிரதித்தலைவர் கலைஞர் என்.எம்.அலிகான், அமைப்பின் செயலாளர் அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், ஆலோசகர் கவிஞர் கே.எம்.எம்.ஏ.அஸீஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments