Breaking News

ஊரடங்கு சட்டம் நீடிக்குமா?

MADURAN KULI MEDIA 
05 /11/2020

எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இன்று (05) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இம்முறை வைரஸ் ஆனது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால் கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note