Breaking News

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்திற்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி அன்பளிப்பு.

நூருல் ஹுதா உமர்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிராந்திய நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்கு உடல் வெப்பநிலையை கணிக்கும் வெப்பநிலை பரிசோதனைக் கருவியை  (Infrared fore head   thermometer)  எம்.எம். பீர் முஹம்மட்  கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலய பொறியியல் உதவியாளர்  திரு. எஸ். சிவானந்தன் அவர்களிடம் அன்பளிப்பு செய்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களினதும், தினசரி சேவை பெருநர்களாக வருகை தரும் வாடிக்கையாளர்களினதும் நலன் கருதி தாமாக முன்வந்து இக்கருவியை அன்பளிப்பு செய்தமைக்காக அவருக்கு நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்பர் அவர்கள் சக ஊழியர்கள் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்களான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் மற்றும் எஸ்.எச். ஐயுப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments