Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் காரியாலயம் திறந்து வைப்பு.

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட நாள் குறைபாடாக காணப்பட்ட பிரதி அதிபர் காரியாலயம், ஆசிரியர் ஓய்வு அறை ஆகியவற்றை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் சுமார் இரண்டரை இலட்சம் (250,000/=) ரூபா பெறுமதி செலவில் புதுப் பொழிவுடன் புனர்நிர்மாணம் செய்து வைப ரீதியாக  இன்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில்  இடம்பெற்ற  இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் சக உறுப்பினர்களான என்.எம்.எம்.ஹிஸாம் (கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்) ஏ.எம்.ஹனீஸ், எம்.எப்.எம்.றிஸ்பிகான், என்.எம்.எம். தாசீம், இவர்களுடன் பாடசாலை கல்வி அபிவிருத்தி குழு உறுபினர்களான சீ.எம். தாவூத் நியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.










No comments