சிறையில் இருக்கும் மகனுக்காக தாய் செய்த அதிர்ச்சி காரியம் – இலங்கையில் சம்பவம்.
MADURAN KULI MEDIA
02/10/2020
கண்டி- பல்லேகலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச் சென்ற பெண்ணொருவரை காவல்துறையினர் நேற்று (01) கைது செய்தனர்.
குறித்த பெண் சர்க்கரையுடன் கலந்து குறித்த ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலைக்குள் கொண்டுவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கண்டி-சுதுஹம்பொல பகுதியில் வசித்து வருபவர் என்பதோடு,
சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments