Breaking News

புத்தளத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார் புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ்.

புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் வருமுன் காப்போம் வேலைத்திட்டத்திற்கு அமைய புத்தளம் நகர சபையின் முழு பலத்தையும் பிரயோகித்து புத்தளம் நகரையும், அதனை அண்டியுள்ள பிரதேசங்களையும் பாதுகாக்கின்ற வேலைத்திட்டம் இன்று (27)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தை புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் களத்திலிருந்து வழி நடாத்தினார். இதன்போது பஸ் தரிப்பு நிலையம், தினச்சந்தை, அரச நிறுவனங்கள்,  வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றிற்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

அத்தோடு, நகர சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நம்மையும், நமது நகரையும், நமது நாட்டையும் covid-19 தொற்றிலிருந்து காப்பாற்ற முன்வருமாறு நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.













No comments

note