Breaking News

அரவிந்தகுமார் எம்.பி தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் : தலைவர் மானோ அறிவிப்பு.

நூருள் ஹுதா உமர். 


நேற்றைய தினம் அரசுக்கு ஆதரவாக 20ஐ ஆதரித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும் என்றும் அதையடுத்து, அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்பி, த.மு.கூட்டணியிலிருந்து விலக்கப்படுவார். 

அரவிந்தகுமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணி கேட்டுக் கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.



No comments

note