கடையாமோட்டை முஸ்லிம் மையவாடி ஒளி விளக்கால் பிரகாசிப்பு
🌐MADURAN KULI MEDIA🌐
புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முஸ்லிம் மைய வாடிக்கு மின் விளக்குகள் நேற்றைய தினம் பொருத்தப்பட்டது.
இம்மையவாடி மின் விளக்குகள் இன்றி நீண்ட காலமாக இருளில் காணப்பட்ட நிலையில் இதனை ஊர் மக்களின் உதவியோடு பள்ளிவாசல் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைவாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மக்களுக்கு இலகு படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில்
இதன் தோற்றமும் இரவு நேரங்களில் அழகிய காட்சி அளிப்பதை புகைப்படத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments