ஆற்றை கடக்கும் வரைக்கும் அப்பப்பா, ஆற்றை கடந்தபின்பு சித்தப்பா என்கிறார் அலி சப்ரி எம்பி.
மூன்று தசாப்தங்களாக புத்தளம் மாவட்டம் இழந்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தினை நடைபெற்று முடிந்த தேர்தல் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
இதற்காக புத்தளம் மாவட்டத்தின் சமூக ஆர்வளர்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், கட்சி போராளிகள் மற்றும் அரசியலாளர்கள் என அனைவரினதும் முயற்சியின் காரணமாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி பிரிந்துகிடந்த அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தராசு சின்னத்தில் போட்டியிட்டனர்.
இந்த கூட்டைப்பின் மூலமாக எதிர்பார்த்தது போல் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது. இதனை பெறுவதற்காக அனைத்து கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் கடும் பிரயத்தனம் செய்தனர்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கே.ஏ.பாயிஸ், எஸ்.எச்.எம். நியாஸ், எஸ்.எச். பைரூஸ், ஏ.எஸ்.எம். ரிழ்வான் ஆகிய நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன், அவர்களது கடின உழைப்பு மிகவும் பிரதானமானது. அவ்வாறிருந்தும் மக்கள் காங்கிரசை சேர்ந்த அலி சப்ரி அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்களின் வெற்றிக்கு உரமாக உழைத்த ஏனைய வேட்பாளர்களை கணக்கில் எடுக்காது மிகவும் பிரயத்தனம் செய்து உருவாக்கிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நேற்றய சம்பவம் நடந்தேறியது.
அதாவது ஒருதலை பட்சமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியை வரவேற்கும் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
நேற்றைய ஊர்வலத்துக்கு தான் எம்பியாகுவதற்கு உழைத்த ஏனைய அனைத்து வேட்பாளர்களையும் அழைத்திருக்க வேண்டும். அவ்வாறு அழைக்காததையிட்டு பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு தேவை. ஊர்வலம் நடாத்துவதற்கு மக்கள் காங்கிரஸ் தேவையா ?
தான் வெற்றி பெறுவதற்கு புத்தளம் மாவட்டத்தின் சக வேட்பாளர்கள் தேவை. ஊர்வலம் நடாத்துவதற்கு மாவட்டத்துக்கு வெளியில் உள்ளவர்கள் தேவையா ?
புத்தளம் நகரத்து நகரபிதாவான பாயிஸ் அவர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்திருந்தும் பெரும் மனதோடு ஊர்வலம் வருகின்ற அலி சப்ரி எம்பி அவர்களை வரவேற்று மாலை அணிவிக்க தயாராக வீதிக்கு மாலையோடு வந்தார்.
ஆனால் புத்தளம் நகரத்தின் நகரபிதாவான தன்னை அழைக்காமல் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற முஷாரப், ரிசாத் பதியுதீன் ஆகியோர்களுடன் மக்கள் காங்கிரஸ் சார்பான கட்சி ஊர்வலம் வருகின்றது என்பதனை அறிந்ததும், கொண்டுவந்த மாலையை அங்கிருந்த ஒரு உலமாவுக்கு அணிவித்துவிட்டு பாயிஸ் அவர்கள் திரும்பி சென்றுவிட்டார்.
இதற்கு பின்பு சந்தர்ப்பவாதியான அலி சப்ரி அவர்கள் அடுத்த தேர்தல் மூலமாகவும் பாராளுமன்றம் செல்வதனை கனவிலும் நினைக்க முடியாது.
எனவேதான் ஆற்றை கடக்கும் வரைக்கும் அப்பப்பா என்று விட்டு ஆற்றை கடந்தபின்பு சித்தப்பா என்று நிரூபித்துவிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்கள்.
எம்.எஸ்.எம்.றிஸான்
செயலாளர்
SLMC பு/அக்கரபத்து மத்திய குழு
No comments