அம்மை, ருபல்லா நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலை தீவு - WHO பாராட்டு
MADURAN KULI MEDIA
09 07 2020
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் அம்மை மற்றும் ரூபெல்லா நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் சின்னம்மை, ரூபெல்லா ஆகிய நோய்களை இல்லாதொழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தென்கிழக்காசிய பிராந்தியத்தில், குறித்த இலக்கிற்கு முன்னதாக இரு நோய்களையும் இல்லாதொழித்த நாடுகள் என்ற பெருமை இலங்கைக்கும், மாலைதீவிற்கும் கிடைத்துள்ளது.
"இந்த கொலையாளி மற்றும் பலவீனப்படுத்தும் நோய்களுக்கு எதிராக அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவருக்கும் ஆரோக்கியமான மக்கள்தொகை மற்றும் ஆரோக்கியத்தை அடைவதற்கான எங்கள் முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும்" என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் கூறினார்.
மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இதில் சாதனை புரிந்தமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மாலைதீவில் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூபெல்லா நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்தார்.
இதேவேளை, இலங்கையினுள் கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியான அம்மை நோயாளர் பதிவான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூபெல்லா நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த வெற்றி ஊக்கமளிக்கும் மற்றும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது என்று தெரிவித்த வைத்தியர் கேத்ரபால் சிங், இந்த பொது சுகாதார சாதனைக்கு ஒன்றாக பங்களித்தவர்கள், சுகாதார அமைச்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மிக முக்கியமாக சமூகங்களைப் அவர் பாராட்டினார்.
இதேவேளை, தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போதும் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான உறுப்பு நாடுகளின் முயற்சிகளை பிராந்திய பணிப்பாளர் பாராட்டினார்.
"பல நாடுகளில் வெகுஜன தடுப்பூசி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், விரைவில் அவற்றை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதை ஊக்குவிக்கிறது," என்றும் அவர் கூறியுள்ளார்
செய்தி ஆசிரியர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments