புத்தளம் விஜயத்தின் போது ஜனாதிபதிக்கு இரண்டு இலட்சம் பணம் நன்கொடை வழங்கிய பெண்
"அன்புள்ள ஜனாதிபதியே, சட்டம், நீதி மற்றும் நல்லொழுக்கத்தைப் பாதுகாத்து வளமான நாடு ஒன்றை கட்டியெழுப்பக்கூடிய ஒர் அரசாங்கத்தை அமையுங்கள்"
புத்தளம், மாதம்பே, தண்ணிவெல கிராமத்தில், நேற்று - 5000 ரூபாய் தாள்களின் கட்டு ஒன்றினைச் சுற்றி ஜனாதிபதிக்கு அன்பளித்த தாளில் இவ்வாறு எழுதியிருந்தார் ஒரு மூதாட்டி.
திருமதி. M. A. H. P. மாரசிங்ஹே, என்ற 84 வயதான அந்த ஓய்வுபெற்ற ஆசிரியை - கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி நிதியத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய்களை அன்பளிப்பு செய்திருந்தார்.
இவ்வாறான தருணங்களே எனது மனவுறுதியையும் பொறுப்பையும் மென்மேலும் அதிகரிக்கின்றன! என்று ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
No comments