கோத்தபாய அரசில் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கு மக்கள் ஆணையை கேட்கிறார் சுமந்திரன்.
MADURAN KULI MEDIA
11/07/2020
கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெறுவதற்காக கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என தமிழ்தேசிய அமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது ஆட்சி ராஜபக்ச குடும்பத்தின் கைகளுக்கு சென்றுள்ளது,அவர்களின் அரசியல் அணுகுமுறைகள் எப்படிப்பட்டது எல்லோருக்கும் தெரிகின்றது என தெரிவித்துள்ள சுமந்திரன் இந்த அரசில் ஒரு கூட்டுப்பொறுப்புடன் இணையலாமா என்ற கேள்வி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை கடந்தஅரசில் அமைச்சு பதவிகளை பெற்றிருந்தால் இன்னும் கூடுதலான நிதிகளை பெற்றிருக்கலாம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல்தீர்வொன்று ஏற்படுவதில் உள்ளதாமதம் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாரியதாக்கத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள சுமந்திரன் பொருளாதாரரீதியாக நாம் வலுப்படவேண்டும் இல்லாவிட்டால் நாம் நலிவடைந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்,என தெரிவித்துள்ள சுமந்திரன் அரசியல்தீர்வொன்று எப்போது வரும் என தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக சூழலில் காத்திருந்துபேச்சுவார்த்தை மூலம்தான் பெறவேண்டும்,போர்ச்சூழல் என்றால் அடித்துபறிக்கலாம் ஆனால் இது எப்படியல்ல எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இடைப்பாட்ட காலத்தில் நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாகயிருந்தாலும் என்ன அமைச்சுக்கள் எத்தனை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றை பேரம்பேச எமக்கு பலம் இருக்கவேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தி ஆசிரியர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments