JobVibe.lk - Sri Lanka Job Portal

பிரதம வேற்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளத்தில் கேள்விக்குறியாகியுள்ளன: ஆப்தீன் எஹியா தெரிவிப்பு!

பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளம்  தொகுதியில் கேள்விக்குறியாகியுள்ளன, தராசு கூட்டணி சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஒன்றுக்கான முயற்சி இரட்டிப்பாக மாறலாம் என பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா நம்பிக்கை தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் பொது தேர்தலில்  தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பொதுவான காரியாலயம் நேற்று (09) புத்தளம் மாவட்ட ஜம்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பால் பாதிக்கப்பட்ட புத்தளம் தொகுதி மக்கள் நாம் ,தொடர்ந்தேர்ச்சியாக எமக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து வந்தோம். தொடராக வந்த அரசாங்கங்கள் எமது தொகுதியில் அபிவிருத்தியில் முனைப்பு காட்டவில்லை, மாற்றமாக  சீமெந்து தொழிற்சாலை ,மற்றும் அனல் மின் நிலையம் ,அருவக்காலு குப்பை திட்டம் என எமது தொகுதிக்கு பாதிப்பேற்படுத்தும் திட்டங்களை எமது எதிர்ப்பினை தாண்டியும் சர்வாதிகாரமாக செயற்படுத்துவதிலேயே முனைப்புக்காட்டினார்கள்.

இவ்வாறு தொடராக வாக்களித்த நாம் ஏமாற்றங்களையே சந்தித்தோம்.இதன் விளைவே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கட்சிகளுக்கு அப்பால் எம்மை ஒன்றிணைத்து தராசு கூட்டணி உருவாக காரணமானது. இதனை சிலர் தவறான கோணத்தில் இனவாதமாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

வெற்றி இலக்கினை நோக்கி பயணிக்கின்ற போது எமக்குள் ஏற்படுகின்ற போட்டி , சவால்கள் எமது ஒரு பிரதிநிதித்துவம் எனும் இலக்கை இரட்டிப்பாக்கலாம் என்ற ஆய்வுகளும் சமூகமட்டத்தில் எழுந்துள்ளன.எதிர் வரும் தேர்தல் முடிவுகள் யாரின் சுய வெற்றியாகாது.மாறாக அது ஜம்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் முயற்சியாகவும், சக வேற்பாளர்களின் தியாகத்தின் பங்காகவுமே நான் கருதுகின்றேன்.

மக்களுக்கு வெறுமனே பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டோம் என்ற சந்தோசத்தை விட அந்த பிரதிநிதித்துவத்தினால் இழந்த உரிமைகளை வென்றெடுத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியே உண்மையான சந்தோசமாகும் என நான் கருதிகிறேன். அதனை இந்த பிரதிநிதித்துவத்தின் மூலம் ஏற்படுத்துவோம் என உறுதியளித்தார்.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال