அக்கறைபற்று உதவி மையத்தின் ஏற்பாட்டில் இருதய சத்திர சிகிச்சைக்காக இரண்டு இலட்சம் ரூபாய் அன்பளிப்பு
புத்தளம் அக்கறைபற்று பிரதேசத்தில் இயங்கிவரும் "அக்கறைபற்று உதவி மையம்" என்ற வட்சப் குழுமத்தின் ஏற்பாட்டில் இருதய சத்திர சிகிச்சைக்கான நிதிஉதவி கோரப்பட்டிருந்தது.
அந்தவகையில்
விருதோடையை பிறப்பிடமாகவும் நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தீக் (மௌபு) ௭ன்பவருக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள இருப்பதனால் சுமார் ஆறு இலட்சம் ரூபா தேவைப்படுள்ளது. இதனை கருத்திற் கொண்ட அக்கறைபற்று உதவி மையம் வடசப் குழுமத்தின் ஊடாக நிதி திரட்டப்பட்டு சுமார் 200,000/=
இரண்டு இலட்சம் ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்காக நிதிஉதவி வழங்கிய அனைவருக்கும் அக்கறைப்பற்று உதவி மையம் வட்சப் குழுமத்தின் பிரதானி என்ற வகையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எம்.ஏ.எம். சர்ஜுன் தெரிவித்தார்.
No comments