Breaking News

இன்று முதல் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்

இன்று முதல்  (28)  நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

​கொவிட் 19 பரவலையடுத்து,  கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது.

அத்துடன், கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை  மாத்திரம் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தது.

இந்நிலையில்,  இன்று (28) தொடக்கம் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




No comments

note