மத்திய கிழக்கில் கொரோனாவால் 23 இலங்கையர் மரணம்
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட 23 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மரணித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8 பேரும் குவைத்தில் 07 பேரும் துபாயில் 06 பேரும் ஓமானில் 02 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் 2000 க்கும் மேற்பட்ட இலங்கையர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
No comments