Breaking News

24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் அறிவுறுத்தல்

🌐 MADURAN KULI MEDIA🌐 

16-05-2020

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மின்சாரம் இன்றி சுமார் 44 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிக மின் இணைப்புகளால் ஏற்பட்ட சேதம் காரணமாக நுவரா எலியா மாவட்டத்தில் 780 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவது நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக திருத்தப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர், 
S.M.M.SHAFAQ (JAWADHI)



No comments

note