சவூதியில் எதிர்வரும் பெருநாள் விடுமுறை தினங்களில் 24 மணி நேர ஊரடங்கு அமுல் படுத்த முடிவு!
கொரோன அச்சம் காரணமாக எதிர்வரும் ஈதுல் பித்ர் விடுமுறையின் போது (மே 23 முதல் 27 வரை) சவூதி முழுவதும் 24 மணித்தியால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சவூதி உள்நாட்டு அமைச்சு நேற்று (மே 13) தெரிவித்துள்ளது.
முழு நேர ஊரடங்கு உத்தரவிலுள்ள மக்கா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு 9.00 மணி முதல் 05 மணி வரை மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் கொரோனாவினால் சவுதியில் பல இடங்களில் 24 மணி நேர ஊடரங்கு சட்டம் அமலில் இருந்தது. என்றாலும் தற்போது அது தளர்த்தப்பட்டு ஒரு சில இடங்களில் மாத்திரம் ஊடரங்கு சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments