Breaking News

பிரான்ஸில் மே மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு

🌐 MADURAN KULI MEDIA🌐

14 04 2020

France Update

உலகம் முழுவதும் 19 லட்சத்து 25 ஆயிரத்து 553 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 568 பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் உத்தரவிட்டுள்ளார்.

பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ‘’மே 11 ஆம் திகதி பிரான்ஸில் கொரோனா பரவலின் அடுத்த கட்டம் தொடங்கும். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்’’ என ஜனாதிபதி இம்மானுவேல் தெரிவித்தார்.


News reporter
S.M.M.SHAFAQ
 (JAWADHI)



No comments