Breaking News

அடுத்த வாரம் பகுதியளவில் ஆரம்பமாகவுள்ள அரச நிறுவனங்களின் பணிகள் – ஒப்புதல் கிடைத்தது

🌐 MADURAN KULI MEDIA🌐🇱🇰

17 04 2020

அதிஅபாய வலயங்களிலுள்ள அரச நிறுவனங்களில் 20 வீதமான சேவையை அடுத்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 50 வீதமான சேவையை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி குறிப்பிட்டார்.

கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ள அரச நிறுவனங்களின் குறைந்தளவான ஊழியர்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன.

அதேவேளை, சேவை நேரத்திற்குள் வெவ்வேறு நேரங்களில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இந்த காலப்பகுதிக்குள், அத்தியாவசிய சேவைக்கு முன்னுரிமை வழங்கப்டவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கான சுற்று நிரூபம் விரைவில் வௌியிடப்படும் என பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

News reporter
SMM.SHAFAQ
 (JAWADHI)



No comments