Breaking News

Online சேவை வழியாக மாத்திரமே பொலிஸ் அனுமதி (Clearance) சான்றிதழ்

நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக ஒன்லைன் Online சேவை வழியாக மாத்திரம் பொலிஸ் அனுமதி (Clearance) சான்றிதழ்களை வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
பொலிஸ் அனுமதி சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை ஏற்க அமைக்கப்பட்ட அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், அடையாளம் காணப்படாத நோய்த்தொற்றுடையவர்கள் பொது மக்களிடையே இருப்பதை நிராகரிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்லைன் சேவை மூலம் பொலிஸ் அனுமதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)



No comments