Breaking News

கொரோனா வைரஸ் எங்களில் பரவியுள்ளதா ? வீட்டிலிருந்தவாறு எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

கொரோனா வைரஸ் எங்களை தாக்கினால் அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்குமென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதில் மூச்சுவிடுவதற்கு கஸ்டப்படுதல், தொண்டை கரகரப்பு, இருமல் போன்றன பிரதான அறிகுறிகளாக ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. 

ஆனால் இந்த நோய்கள் சாதாரணமாக எல்லோருக்கும் சாதாரணமாக இருக்கின்ற நோய்கள்தான். குறிப்பாக ஆஸ்த்மா நோய் உள்ளவர்களிடம் அடிக்கடி இவ்வாறான அறிகுறிகளை காணக்கூடியதாக உள்ளது. 

அதனால் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாதவர்களும் இந்த நோய் உள்ளவர்களை சந்தேகப்பட்டு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு பின்பு அவர்கள் வைரசின் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை என்று விடுவிக்கப்பட்ட செய்திகளை நாம் அன்றாடம் அறிகின்றோம்.  

ஆனால் ஜேர்மன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் நடாத்திய ஆய்வுகளில் இந்த அறிகுறிகளுடன் வேறு சில பிரதான அறிகுறிகளும் தென்படுவதாக கூறியுள்ளார்கள். அதாவது ஜெர்மனியில் 6500 க்கு மேற்பட்டவர்கள் இந்த வைரசினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். 

இவ்வாறானவர்களை ஜேர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் முழுமையான ஆய்வுகளுக்கு உற்படுத்தியுள்ளார்கள்.  

அதில் கொரோனா வைரசினால் தாக்கப்பட்டவர்களுக்கு உணவுகளின் சுவைகளில் மாற்றம் தென்படுவதாகவும், அதாவது எவ்வாறான சுவையான உணவுகளும் சுவையின்றி காணப்படுவதாகவும், 

மற்றும் மணங்களை உணர்வதில் மாற்றம் தென்படுவதாகவும் அதாவது மணக்ககூடிய பொருட்களிலிருந்து எந்தவித மணமும் உணரப்படாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் தாங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்று அச்சமடயாமல் அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று தங்களை பரிசோதிப்பதன் மூலம் ஏனையவர்களுக்கும் அது பரவாமல் கட்டுப்படுத்த முடியும். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது



No comments