JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் சமூகத்துக்காக மு.கா வுடன் இணையலாம் என்றால் ஏன் அம்பாறையில் இணைய முடியாது? - ஷிராஸ் மீராஸாஹிப்

கூட்டமைப்பாக போட்டியிடவே கடைசி வரை முயற்சித்தேன் தலைவர் புதிதாக கட்சிக்குள் வந்தவர்களை திருப்திப்படுத்த சமூகத்தை காட்டிக்கொடுத்துவிட்டார்

புத்தளத்தில் சமூகத்துக்காக மு.கா வுடன் இணையலாம் என்றால் ஏன் அம்பாறையில் முடியாமல் போனது. யாரை திருப்திப்படுத்த மக்கள் காங்கிரஸ் தலைவர் அம்பாறை தனியாக கேட்கும் தீர்மானத்திற்கு வந்தார்.

சஜித் அணியோடு மு.கா வும், ம.கா வும் அம்பாறையில் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாக கேட்டிருந்தால் மாவட்டத்தை வெற்றி கொண்டு நான்கு ஆசனங்களையும் முஸ்லிம்களே பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் மக்கள் காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த சில பதவி ஆசை பிடித்தவர்களால் கைநழுவி போயுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காகவும், சமூகத்தின் பிரதிநிதிதித்துவத்தை பாதுகாக்கும் முகமாகவும் எவ்வளவோ கெஞ்சியும் எமது கட்சியில் உள்ள வக்கிர குணம் படைத்த சிலரால் சமூக ஒற்றுமை, சமூகத்திற்கான பிரதிநிதித்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. 

வெற்றி பெரும் நான்கு ஆசனங்கள் யாராக இருந்தாலும் அவர் எமது சமூகத்தினர்தானே என்ற பெருந்தன்மை இல்லாமல் தனியே அரசியல் நோக்கத்திற்காக சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 

நிச்சயம் இல்லாத பிரதிநிதிக்காக எனது மனச்சாட்சிக்கு எதிராக என்னால் தேர்தலில் வேட்பாளராக நின்று எனது காலநேரத்தையும் எனது உழைப்பையும் வீணடிக்க விரும்பவில்லை அதனாலயே இத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். என்றும் கட்சியோடு இருந்து கொண்டு எனது போராட்டம் தொடரும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எனது ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் சமூத்துக்கு எது வெற்றியாக அமையும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதன்படி நடக்குமாரு வேண்டுகிறேன்.


Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال