ஊரடங்கு உத்தரவு நேரத்தில் சட்டத்தை மீறாமல் எவ்வாறு முக்கிய கருமங்களை நிறைவேற்றிக் கொள்வது?
முக்கிய/அவசர அலுவல் (வைத்தியசாலை செல்வது போல்) ஏதாவது இருப்பின்
- நீங்கள் தற்போது தங்கியிருக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு நீங்கள் அங்கு வருவதாக அறிவியுங்கள். நீங்கள் செல்லும் வண்டி இலக்கத்தையும் பதிவு செய்து விடுங்கள் (இது இடைவெளியில் ரோந்து செய்துகொண்டிருக்கும் பொலிஸார் அல்லது இராணுவம் உங்களை இடைமறிப்பதை தடுக்கும்)
- பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொறுப்பதிகாரி (OIC) ஐ சந்தித்து உங்கள் தேவையை கூறுங்கள்.
- சரியான காரணமாயின் கீழே உள்ளது போல் ஒரு படிவத்தை நிரப்பித் தருவார்கள்.
-சரியான தகவல்களை கொடுத்து அவை சரியான முறையில் நிரப்பப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் படிவத்தை பெற்றுக்கொள்ளுங்கள் (பொலிஸார் பிழைகள் விட வாய்ப்பு அதிகம்)
(கீழே உள்ள படிவம் கையில் இருக்கும் வரை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக உங்களை கைது செய்ய மாட்டார்கள்)
Shihar Hassan
No comments