ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி..!
நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தங்களின் விமான பயணச் சீட்டை, ஊரடங்கு சட்டத்தின்போது அனுமதி சீட்டாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments