Breaking News

கொரானா விழிப்புணர்வை முகநூல் ஊடகத்தில் முன்னுரிமை படுத்துங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனையில் கோரிக்கை

முக நூல் ஊடகவியலாளர்களே  இப்போதைக்கு  அரசியலை விடவும்  பாரிய ஆட்கொல்லி  நோய்க்கு  மக்கள் எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றி  மக்களை விழிப்பூட்டுங்கள் . 
பொதுமக்கள் ! சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குங்கள்.

  உலகமே இன்று ஜும்மாவை  இழந்து விட்டது . இவ்வாறான இக்கட்டான காலத்தில் ஊடகவியலாளர்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்த்து கொரானா  உயிர் ஆபத்திலிருந்து  மக்களை  மீட்க  முன் வாருங்கள் என்று  கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை  நடை பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ்  தெரிவித்தார்.



No comments

note