புத்தளம் பிராந்தியத்தில் பி.ப 4.30 முதல் காலவரையறையற்ற பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்
புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு!
புத்தளம் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் 4.30 முதல் மறு அறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும், சிலாபத்தில் 7 பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments