Breaking News

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் - மகாநாயக்க தேரர்கள் நாளை சந்திப்பு

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நாளை (11) செவ்வாய்க்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நாளை (11) செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணி, மு.ப 2.00 மணி மற்றும் இரவு 7.00 ஆகிய நேரங்களில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக சந்திக்கவுள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் ஆகியோர் கடந்த வாரம் தங்களின் அமைச்சு பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.

எனினும் குறித்த அமைச்சர் பதவியினை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து விளக்கமளிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - விடியல் -

No comments