Breaking News

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீம் றகுமான் அவர்களின் வாழ்த்துச் செய்தி.

முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருவகையான அச்சத்தில் மூழ்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில்
மலர்ந்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முழுமையான  பாதுகாப்பையும் நிம்மதியையும் கொண்டு வரவேண்டும் என்று பிராத்திப்பதாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீம் றகுமான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்;

ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து இறைவணக்கத்தில் அயராது ஈடுபட்டு நோன்பு நோற்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அவர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு 
பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டை நேசிக்கும் -இந்த நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாத முஸ்லிம்கள் இந்த அசாதாரண சூழலை விரும்பவில்லை.ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர்.நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் வரலாற்று நெடுகேயும் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணியே வருகின்றனர்.

குண்டு வெடிப்புடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் இவ்வாறு துன்பங்களை அனுபவிப்பதும் சிறைகளில் வாடுவதும் முடிவுக்கு வரவேண்டும்.மலர்ந்திருக்கும் இந்தப் பெருநாளில் அல்லாஹ் அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என பிராத்திக்கின்றேன்.

ஏ.ஆர் .எம். ஜெஸீம் .கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் .


No comments