Breaking News

அல்லலுறும் எம் சமூகத்துக்காக ஈகைத் திரு நாளில் பிரார்த்திப்போம் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா...!!!

புனித மிகு ஈகைத் திருநாளான நோன்பு பெருநாளை நேற்று வெளிநாடுகளில் கொண்டாடிய எமது சகோதர உம்மத்துக்கும்,இன்று அதாவது 05-06-2019 கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.   

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமழான் நோன்பானது ஒரு மாத காலம் எம் உம்மத்தை நெறிப்படுத்தி, தியாகம், பொருமை, சகிப்புத் தன்மை போன்றவற்றை கற்றுத் தந்துவிட்டு எம்மை விட்டு பிரிந்திருக்கின்றது. எவ்வாறு ரமழானுடைய காலங்களில் எமது நற்கிரியைகளை, வணக்க வழிபாடுகளை சஞ்சலமின்றி இறைவனின் திருப்தியை நாடி செய்தோமோ அதே போன்று ரமழான் அல்லாத காலங்களிலும் அது தொடர வேண்டும். அதுவே ரமழான் எமக்கு கற்றுத்தந்த பாடமாக அமையும் என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா தனது  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில்

எமது நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில், குறிப்பாக உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த மிலேச்சத்தனமான, படு மோசமான குண்டுத் தாக்குதலுக்கு  பிற்பாடு பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தப்அபிப்பிராயம் இனவாதிகளால் ஊற்றப்பட்டு அது தற்போது முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அது மட்டு மன்றி உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு பிற்பாடு சந்தேகத்தின் பேரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எமது அப்பாவி சகோதரர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் எமது பெருநாளை ஆடம்பரமாக கொண்டாடாமல் சற்று நிதானமாகவும் தியாக மனப்பான்மையோடும், விட்டுக் கொடுப்போடும் பெரும்பான்மை சமூகத்துக்கு இடையூறு அழிக்காமல் இந் நல் நாளில் அல்லலுறும் எமது உம்மத்துக்காக பிரார்த்திப்பதோடு கட்சி பேதம்,  இயக்க வேறுபாடுகளை களைத்தெறிந்து எமது ஒட்டு மொத்த சமூகமும் இனவாதிகளின் சதியை முறியடிக்க முன் வர வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments