Breaking News

அத்துரலிய ரத்ண தேரரின் உண்ணாவிரதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அத்துரலிய ரத்ண தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதுடன், பிரதமர் உட்பட அமைச்சரவைக்கும் அதன் பிரதி அனுப்பப்பட்டுள்ளது.


No comments