எதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகை பற்றியதோர் வழிகாட்டல்
பொதுவாக பெருநாள் தொழுகை திடலில் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டலாகும் நபியவர்கள் தனது வாழ்வில் ஒரு முறையேனும் அதை பள்ளிவாயிலில் நிறைவேற்றவில்லை சிறுவர்கள் பெண்கள் உட்பட அனைத்து ஆண்களும் பெண்களும் அதில் பங்கேற்க வேண்டும்.
ஆனாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அத்தொழுகையை எங்கே நிறைவேற்றுவது என்பது பற்றிய வழிகாட்டல் ஒன்றை சமூகத்திற்கு வழங்குவது காலத்தின் தேவையாகும்.
அந்த வகையில் நாட்டில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவும் அரச தரப்புக்களும் அறிவித்துள்ளன இருந்தாலும், சூழ்நிலைகள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படலாம் எந்தப் பிரதேசத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற அச்ச நிலை உள்ளதோ அந்தப்பிரதேசங்களில் நிர்ப்பந்தம் என்ற நிலையில் பள்ளிவாயிலில் அத்தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஆனாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு இத்தொழுகையை திடலில் தொழுவதே நபிவழியாகும்
எனவே உங்கள் பிரதேசத்தின் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இவ்விடயத்தில் பொருத்தமான தீர்மானத்திற்கு வருமாறு ஐக்கிய தௌஹீத் ஜமாத் நாட்டு மக்களை வேண்டிக் கொள்கிறது.
ஜஸாகுமுல்லாஹு கைரன்
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
பொதுச் செயலாளர்
31.05.2019

No comments