JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னார் எருக்கலம்பிட்டியில் பிரமாண்டமான ஹஜ் விழாவும் பிரமிக்க வைக்கும் மக்கள் ஒற்றுமையும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில்   16வது ஹஜ் பெரு நாள் விழா வெள்ளி, சனி, ஞாயிறு  (29,30,31): ஆகிய மூன்று தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது 


இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் திரு.கனகசபாபதி கனனேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக , மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் ரஞ்சித் கலந்து கொண்டதோடு , எருக்கலம்பிட்டி மற்றும் நாகவில்லு பகுதிகளின் பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,  மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பொதுமக்கள்  என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


மறைந்த முன்னால் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமான மர்ஹூம்  அல்ஹாஜ் நூர்தீன்  மசூரினால் மக்கள் ஒற்றுமைக்காக எருக்கலம்பிட்டி கிராமத்தில் இந்த விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது  


இந்த விழாவை  தடைப்படாமல் தொடர்ந்தும் நடாத்தும் நோக்கத்தில்  16வது மாபெரும் ஹஜ் பெருவிழா  நிகழ்வானது  29.30.31 ஆகிய மூன்று தினங்களும்  மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)  மைதானத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 


அதன் முதல் நிகழ்வான  23 கழகங்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டப் போட்டியை தொடர்ந்து கரப்பந்தாட்டம் தோணிப் போட்டி என்று பல்வேறுபட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது 


இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை  பல்வேறுபட்ட மைதான நிகழ்ச்சிகள் நடைபெற்றது  இந்த நிகழ்வுகளின் சிறுவர்கள் சிறுமிகள் இளைஞர் யுவதிகள் என்று பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் 


மேற்படி மன்னார் எருக்கலம்பிட்டியின் 16 வது ஹஜ் விழாவுக்கான முழு அனுசரனையையும் அல் ஹாஜ்  M.A.C நியாஸ்  (அகில இலங்கை சமாதான நீதவான்) குமரன் நெட் சென்டர் மற்றும் M A C ஸ்டோர்ஸ உரிமையாளர் வழங்கியிருந்தார்கள்


உண்மையில் இந்த எருக்கலம்பிட்டி 16வது  மக்களின் ஒற்றுமை விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வை வெளிக்காட்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال